2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: செல்சி வெற்றி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த சனிக்கிழமை (27) இடம்பெற்ற போட்டிகளில் செல்சி, லெய்செஸ்டர், வெஸ்ட் ஹாம், ஸ்டோக், வெஸ்ட் புரோம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன் வட்போர்ட், பௌர்ண்மௌத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

செல்சி, சௌதாம்டன் அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் செல்சி வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் செல்சி சார்பாக பெறப்பட்ட கோல்களை சீஸ்க் பப்ரிகாஸும் பிரைன்ஸ்லோவ் இவானோவிக்கும் பெற்றிருந்தனர்.

இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், லெய்செஸ்டர், 1-0 என்ற கோல்கணக்கில் நோர்விச்சையும் வெஸ்ட் ஹாம், 1-0 என்ற கோல்கணக்கில் சந்தர்லேண்டையும் அஸ்டன் வில்லா, 2-1 என்ற கோல்கணக்கில் ஸ்டோக்கையும் வெஸ்ட் புரோம், 3-2 என்ற கோல்கணக்கில் கிறிஸ்டல் பலஸையும் தோற்கடித்தது. வட்போர்ட், பௌர்ண்மௌத் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோல்களைப் பெற்றிருக்காத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .