Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறிமியர் லீக் தொடரின் கடந்த சனிக்கிழமை (23) இடம்பெற்ற போட்டிகளில் மன்செஸ்டர் சிற்றி, செல்சி, சௌதாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன் லிவர்பூல், நியூகாசில் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
மன்செஸ்டர் சிற்றி, ஸ்டோக் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 4-0 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றது. இப்போட்டியில் மன்செஸ்டர் சிற்றி சார்பாக, கெலெச்சி லெஹாஞ்சோ இரண்டு கோல்களையும் பெர்னாண்டோ, சேர்ஜியோ அக்ரோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றனர். இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் 64 புள்ளிகளைப் பெற்றுள்ள மன்செஸ்டர் சிற்றி, பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் மூன்றாமிடத்தில் உள்ளது.
இதேவேளை, செல்சி, ஏ.எஃப்.சி பௌர்ண்மௌத் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 4-1 என்ற கோல்கணக்கில் செல்சி அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் செல்சி அணி சார்பாக ஈடின் ஹஸார்ட் இரண்டு கோல்களையும் பெட்ரோ, வில்லியன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் பெற்றனர். இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் இங்கிலாந்து பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 47 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் செல்சி உள்ளது.
இந்நிலையில், லிவர்பூல், நியூகாசில் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாக டேனியல் ஸ்டுரிட்ஜ், அடம் லலானா ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்தனர். இப்போட்டி முடிவுடன் 55 புள்ளிகளைப் பெற்றுள்ள லிவர்பூல், பிறிமியர் தரவரிசையில் ஏழாம் இடத்தில் உள்ளது.
இதேவேளை, சௌதாம்டன், அஸ்டன் வில்லா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 4-2 என்ற கோல்கணக்கில் சௌதாம்டன் வெற்றி பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .