2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

இங்கிலாந்து பிறிமியர் லீக்: லெய்செஸ்டர் சிற்றி வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறிமியர் லீக் தொடரின் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில் லெய்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றதோடு, ஆர்சனல், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

லெய்செஸ்டர் சிற்றி, சுவான்சீ சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல்கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில், தடைக்குள்ளாக்கப்பட்ட லெய்செஸ்டர் சிற்றியின் நட்சத்திர வீரர் ஜேமி வர்டி பங்கேற்றிருக்காத நிலையில் அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற லியனார்டோ உல்லோவா இரண்டு கோல்களையும் றியாட் மஹ்ரேஸ், மார்க் அல்பிரைட்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும் பெற்றனர்.

இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன் 76 புள்ளிகளைப் பெற்று பிறிமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் லெய்செஸ்டர் சிற்றி, தனக்கும் இரண்டாமிடத்திலுள்ள டொட்டேன்ஹாம் ஸ்பர்ஸ்க்குமிடையிலான புள்ளிகள் வித்தியாசத்தை மீண்டும் எட்டாக அதிகரித்துக் கொண்டது.

இதேவேளை, ஆர்சனல், சந்தேர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாதநிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இந்நிலையில், 64 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆர்சனல், பிறிமியர் லீக் தரவரிசையில் நான்காமிடத்தில் இருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .