2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்

Gopikrishna Kanagalingam   / 2015 ஒக்டோபர் 26 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

3 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களுடன் நேற்றைய 5ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி, சிறப்பாகப் போராடிய போதிலும், இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களைப் பெற்று, 178 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 71 ஓட்டங்களையும் அடில் றஷீத் 172 பந்துகள் போராடி 61 ஓட்டங்களையும் இயன் பெல் 46 ஓட்டங்களையும் பெற்றனர். 10ஆம் இலக்க வீரர் மார்க் வூட், 95 பந்துகள் போராடி 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில், யாசீர் ஷா 4, சுல்பிகர் பாபர் 3 விக்கெட்டுகளையும் இம்ரான் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 378 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி 242 ஓட்டங்களையும் பெற்றதோடு, பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தி, இங்கிலாந்துக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .