Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 27 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தால் இலங்கை வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், செளதாம்டனில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்தே 3-0 என இலங்கை வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் குசல் பெரேரா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
இலங்கை சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய அவிஷ்க பெர்ணான்டோ, அகில தனஞ்சயவை, ஒஷாத பெர்ணான்டோ, லக்ஷன் சந்தகான் ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்.
இங்கிலாந்து சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய ஜேஸன் றோய், மார்க் வூட்டை மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் பிரதியிட்டிருந்தனர்.
இந்நிலையில், டேவிட் மலனின் 76 (48), ஜொனி பெயார்ஸ்டோவின் 51 (43) ஓட்டங்கள் மூலம் சிறந்த அடித்தளத்தைப் பெற்ற இங்கிலாந்து, துஷ்மந்த சமீரவிடம் நான்கு விக்கெட்டுகளை இறுதியில் பறிகொடுத்து, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களையே பெற்றது. சமீர தனது நான்கு ஓவர்களில் 17 ஓட்டங்களையே வழங்கியிருந்தார், பினுர பெர்ணான்டோ, தனது நான்கு ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார். சந்தகான், நான்கு ஓவர்களில் 28 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்தார்.
பதிலுக்கு, 181 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, டேவிட் வில்லி, வோக்ஸ், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், லியான் லிவிங்ஸ்டோன், மொயினிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களையே பெற்று 89 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.
பந்துவீச்சில், வில்லி 4-0-27-3, வோக்ஸ் 4-0-9-1, ஜோர்டான் 4-1-13-1, கர்ரன் 4-0-14-2, லிவிங்ஸ்டோன் 1-0-8-1, மொயின் 0.5-0-3-1 என்றவாறு பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக மலனும், தொடரின் நாயகனாக கர்ரனும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
9 hours ago