Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 24 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான நான்கு நாள் ஒற்றை டெஸ்ட் போட்டி லோர்டஸில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து இவ்வாண்டு எதிர்நோக்கிய அடுத்த பெரிய சவாலான ஆஷஸுக்கான முன்னோட்டமாக இங்கிலாந்துக்கு இத்தொடர் காணப்படுகின்ற நிலையில், 2007ஆம் ஆண்டு தமது உலகக் கிண்ண அறிமுகத்தின்போது பாகிஸ்தானுக்கும், 2011ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் அதிர்ச்சியளித்தது போல இங்கிலாந்துக்கெதிராக அதிர்ச்சி வெற்றியொன்றைப் பெறுவதற்கு அயர்லாந்து எதிர்பார்க்கின்றது.
அயர்லாந்தைப் பொறுத்தவரையில் அவ்வணியின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் டிம் முர்டாக், சிரேஷ்ட ஆரம்பத் துடுப்பாட்டவீரர் போல் ஸ்டேர்லிங் ஆகியோர் லோர்ட்ஸை சொந்த மைதானமாகக் கொண்ட மிடில்செக்ஸுக்காக விளையாடுகின்றமை அவ்வணிக்கு அனுகூலத்தை வழங்குவதுடன், இவர்களுடன் கெவின் ஓ பிரயன், கரி வில்சன், வேகப்பந்துவீச்சாளர் பொய்ட் ராங்கின் ஆகியோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர்.
மறுபக்கமாக தமது உலகக் கிண்ண நாயகனான பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர் ஆகியோருக்கு ஓய்வை வழங்கியுள்ள இங்கிலாந்து, தமது மட்டுபடுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் ஜேஸன் றோய்க்கு இப்போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக அறிமுகத்தை வழங்கி அவரைப் பரிசோதிக்க விரும்புகின்றது.
இதுதவிர, இங்கிலாந்தின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் அன்டர்சன், அண்மையிலேயே காயத்திலிருந்து மீண்டிருந்த நிலையில் அவருக்கு ஓய்வை வழங்கி, குழாமில் இடம்பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் லூயிஸ் கிரேகரி, ஒலி ஸ்டோன் ஆகியோருக்கு அறிமுகத்தை வழங்கி அவர்களையும் இங்கிலாந்து பரிசோதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago