Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக்கால் நடாத்தப்படும் இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் நான்காம்நிலைக் கழகமான கொல்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியில் தோற்றே டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியிருந்தது.
இப்போட்டியானது வழமையான நேரத்தில் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்த நிலையில், பெனால்டியில் 3-4 என்ற ரீதியில் தோற்றே இத்தொடரிலிருந்து டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வெளியேறியிருந்தது.
டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, டெலே அல்லி, எரிக் லமெலா, சண் ஹெயுங்-மின் ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்திய நிலையில், கிறிஸ்டியன் எரிக்சனின் பெனால்டியை கொல்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டீன் கெர்கென் தடுத்திருந்ததுடன், லூகாஸ் மோராவின் பெனால்டி உதை கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.
கொல்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக லுக் நொறிஸ், ஃபிராங்க் நெளபிள், பரிஸ் கவன் ஹோல், டொம் லப்ஸ்லி ஆகியோர் தமது பெனால்டிகளை உட்செலுத்தியிருந்த நிலையில், ஜீவனி ப்றோணின் பெனால்டியை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் கோல் காப்பாளர் போலோ கஸ்னியா தடுத்திருந்தார்.
இந்நிலையில், பிறஸ்டன் நோர்த் என்டின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்த நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக, ரஹீம் ஸ்டேர்லிங், கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்த நிலையில், மற்றையை கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.
இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற நொட்டிங்ஹாம் ஃபொரெஸ்ட்டுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஆர்சனல் நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றது. ஆர்சனல் சார்பாக, கப்ரியல் மார்டினெல்லி இரண்டு கோல்களையும், றொப் ஹோல்டிங், ஜோ வில்லொக், றெய்ஸ் நெல்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
இந்நிலையில், ஷெஃபீல்ட் வெனிஸ்டேயின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற எவெர்ற்றன், நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றது. எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் டொமினிக் கல்வேர்ட்-லூவின் பெற்றிருந்தார்.
இதேவேளை, லுட்டன் டெளணின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில் 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற லெய்செஸ்டர் சிற்றி, நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றது. லெய்செஸ்டர் சிற்றி சார்பாக, டெமராய் கிறே, ஜேம்ஸ் ஜஸ்டின், யூரி டெலிமான்ஸ், கெலெச்சி லெகாஞ்சோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago