Shanmugan Murugavel / 2026 ஜனவரி 18 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (17) நடைபெற்ற மன்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.
யுனைட்டெட் சார்பாக பிறையன் எம்புமோ, பற்றிக் டோர்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற பேண்லியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் சமப்படுத்தியது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை புளோரியன் ரிட்ஸ் பெற்றதோடு, பேண்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் எட்வேட்ஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் சமப்படுத்தியிருந்தது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் காணப்படுகின்றது. சிற்றியும், அஸ்தன் வில்லாவும் தலா 43 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் இரண்டாம், மூன்றாமிடங்களில் காணப்படுகின்றன. 36 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்றது. இதில் வில்லா ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago