Shanmugan Murugavel / 2024 நவம்பர் 03 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், போர்ண்மெத்தின் மைதானத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.
சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜொஸ்கோ கவிரோல் பெற்றதுடன், போர்ண்மெத் சார்பாக அந்தோனி செமென்யோ, இவான்சிலின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற ஆர்சனலுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நியூகாசில் யுனைட்டெட் வென்றது. நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸான்டர் இஸாக் பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியில் அடம் ஆர்ம்ஸ்ரோங்க் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் செளதாம்டன் வென்றது.
இந்நிலையில், இப்ஸ்விச் டெளணின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், லிஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
12 minute ago
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
1 hours ago