2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான தொடரிலிருந்து என்கிடி விலகல்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 12 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் தொடரிலிருந்து தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடி விலகியுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை புதன்கிழமை (10) உறுதிப்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (09) பயிற்சியின்போது என்கிடிக்கு கெண்டைக்கால் பின்தசைக் காயமேற்பட்டுள்ளது.

என்கிடியின் பிரதியீடாக நன்ட்ரே பேர்கர் பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை இத்தொடரின் முதலாவது போட்டிக்கு முன்பதான பயிற்சியின்போது சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹராஜ்ஜுக்கு அடிவயிற்றுப் பகுதியில் உபாதை ஏற்பட்டிருந்தது. ஆகையால் அப்போட்டியில் விளையாடவிருந்த மஹராஜ், கொர்பின் பொஷ்ஷால் பிரதியிடப்பட்டிருந்தார்.

முன்னதாக டேவிட் மில்லரும் கெண்டைக்கால் பின்தசை உபாதை காரணமாக தொடரிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .