2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 08 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டின் முதல் நாளில் முன்னிலையில் பாகிஸ்தான் காணப்படுகின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முல்தானில் திங்கட்கிழமை (07) ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தானின் அணித்தலைவர் ஷண் மசூட் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், ஆரம்பத்திலேயே சைம் அயூப்பை குஸ் அட்கின்ஸனிடம் இழந்தது. பின்னர் மசூட்டும், அப்துல்லாஹ் ஷஃபிக்கும் ஓட்டங்களைக் குவித்தனர்.

இந்நிலையில் 102 ஓட்டங்களுடன் அட்கின்ஸனிடம் ஷஃபிக்கும், 151 ஓட்டங்களுடன் ஜேக் லீச்சிடம் மசூட்டும் குறுகிய இடைவெளியில் வீழ்ந்தனர். பின்னர் பாபர் அஸாமும், செளட் ஷகீலும் இனிங்ஸை நகர்த்திய நிலையில், கிறிஸ் வோக்ஸிடம் 30 ஓட்டங்களுடன் அஸாம் வீழ்ந்தார்.

அந்தவகையில் முதலாம் நாள் முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 328 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றுள்ளது. களத்தில் செளகீல் 35 ஓட்டங்களுடனும், நசீம் ஷா ஓட்டமெதுவும் பெறாமலும் உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .