Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஜூன் 09 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பார்படோஸில் சனிக்கிழமை (08) நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் இங்கிலாந்துடனான குழு பி போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, டேவிட் வோர்னரின் 39 (16), அணித்தலைவர் மிற்செல் மார்ஷின் 35 (25), ட்ரெவிஸ் ஹெட்டின் 34 (18), மார்க்கஸ் ஸ்டொய்னிஸின் 30 (17), கிளென் மக்ஸ்வெல்லின் 28 (25), மத்தியூ வேட்டின் 17 (10) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஜொஃப்ரா ஆர்ச்சர் 4-0-28-1, லியம் லிவிங்ஸ்டோன் 2-0-15-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 202 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, பட்லரின் 42 (28), பில் ஸோல்ட்டின் 37 (23) ஓட்டங்களோடு வேகமான ஆரம்பத்தைப் பெற்றபோதும் இருவரையும் அடம் ஸாம்பாவிடம் இழந்ததோடு, அடுத்து வந்த வில் ஜக்ஸையும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸிடம் இழந்தது.
ஜொனி பெயார்ஸ்டோ, 25 (15) ஓட்டங்களைப் பெற்ற மொயின் அலியை அடுத்தடுத்த ஓவர்களில் ஜொஷ் ஹேசில்வூட், பற் கமின்ஸிடம் இழந்தது. பின்னர் அடுத்து வந்த லிவிங்ஸ்டோடையும் கமின்ஸிடம் இழந்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களையே பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஸாம்பா தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 Jul 2025