Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூலை 01 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பேர்மிங்ஹாமில் புதன்கிழமை (02) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்குமென நம்பப்படுகின்றது.
இப்போட்டிக்கான ஆடுகளமும் முதலாவது போட்டியானதன் போன்று தட்டையானதாகவே துடுப்பாட்டவீரர்களுக்குச் சாதகமானதாகவே இருக்குமென என நம்பப்படுகின்றபோதும், ஆடுகளத்தில் கீழ்ப்பகுதியானது இங்கிலாந்தில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக வறட்சியாக இருக்குமெனக் கூறப்படுகின்ற நிலையில், போட்டியின் நான்காம் மற்றும் ஐந்தாம் நாள்களில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சுழற்சியை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில் இரவீந்திர ஜடேஜாவுக்கு மேலதிகமாக இரண்டாவது சுழற்பந்துவீச்சாளரை இந்தியா களமிறக்குமென எதிர்பார்க்கப்படுவதோடு, முதலாவது போட்டியில் பின்வரிசையில் விக்கெட்டுகள் வரிசையாக பறிபோன நிலையில் குல்தீப் யாதவ் இல்லாமல் துடுப்பெடுத்தாடக்கூடிய வொஷிங்டன் சுந்தரை பிரசீத் கிருஷ்ணாவுக்குப் பதிலாக களமிறக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
மறுபக்கமாக முதலாவது போட்டியில் விளையாடிய அதேயணியே இப்போட்டியிலும் இங்கிலாந்து சார்பாகக் களமிறங்கவுள்ளது. எவ்வாறெனினும் குழாமில் ஜொஃப்ரா ஆர்ச்சர் இடம்பெற்றிருக்கும்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago