Shanmugan Murugavel / 2025 மே 28 , பி.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது பேர்மிங்ஹாமில் நாளை (29) மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
ஹரி ப்றூக்கின் நிரந்தரத் தலைமையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட அவரின் முதலாவது தொடரில் ஜொஸ் பட்லர், ஜோ றூட் என சிரேஷ்ட வீரர்களும் பென் டக்கெட், ஜேக்கப் பெத்தெல், வில் ஜக்ஸ் ஆகியோர் இருப்பது துடுப்பாட்டத்தில் பலத்தை அளிக்கிறது.
மார்க் வூட், ஜொஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் காயம் காரணமாக இல்லாதபோதும் சஹிப் மஹ்மூட், அடில் ரஷீட் ஆகியோர் சிறப்பாக செயற்படக்கூடியவர்கள் என்பதுடன் மத்தியூ பொட்ஸ், லுக் வூட், ஜேமி ஒவெர்ட்டன் ஆகியோருக்கு தம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகக் காணப்படுகிறது.
இந்த இங்கிலாந்து அணிக்கு சவாலளிக்க வேண்டுமாயின் கேசி கார்ட்டி, அணித்தலைவர் ஷே ஹோப்புடன் றொஸ்டன் சேஸ், பிரண்டன் கிங், எவின் லூயிஸ் ஆகியோர் தொடர்ச்சியாக நீண்ட இனிங்ஸ்களை ஆட வேண்டியுள்ளது.
26 minute ago
28 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
28 minute ago
55 minute ago