2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்தைத் தாக்குப் பிடிக்குமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 28 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் (ODI) தொடரானது, செஸ்டர்-லீ-ஸ்றீட்டில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

தொடர்ச்சியாக மிக மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகின்ற இலங்கையணி, தற்போதைய ODI முன்னணி அணியான இங்கிலாந்துக்கு சவாலை வழங்குவதற்கே பாரியளவு முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டியுள்ளது. இல்லாவிடில் இத்தொடரில் மோசமான சில சாதனைகளை இலங்கை பெற்றுக் கொள்ள வேண்டி ஏற்படும்.

இலங்கையணியில் சொல்லிக் கொள்ளக்கூடியதாக வனிடு ஹஸரங்க, துஷ்மந்த சமீர ஆகியோர் காணப்படுகின்ற நிலையில் துடுப்பாட்டமானது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

அந்தவகையில், சிரேஷ்ட வீரர்களான அணித்தலைவர் குஷல் பெரேரா, குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக உள்ளிட்டோர் மேம்பட்ட பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

இதேவேளை, ஆகக் குறைந்தது புதுமுகவீரர்களான சரித் அஸலங்க, தனஞ்சய லக்‌ஷன், இஷான் ஜயரத்ன ஆகிய வீரர்களையாவது களமிறக்கி இலங்கை பார்க்கலாம்.

மறுபக்கமாக இத்தொடரில் காயம் காரணமாக ஜொஸ் பட்லர் இல்லாதபோதும், ஜொனி பெயார்ஸ்டோ, ஜேஸன் றோய், ஜோ றூட்,  அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் எனப் பலமானதாகவே இங்கிலாந்து காணப்படுகின்ற நிலையில், ஜொஃப்ரா ஆர்ச்சர் இல்லாத நிலையில் ஜோர்ஜ் கர்டன் போன்றோரை பரிசோதித்துக் கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .