2025 ஜூலை 05, சனிக்கிழமை

இத்தாலிய சீரி ஏ தொடர்: நாப்போலி, றோமா தோற்றன

Editorial   / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கல்லேகிரியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி தோற்றது. கல்லேகிரி சார்பாகப் பெறப்பட்ட கோலை லூகாஸ் கஸ்ட்ரோ பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அத்லாண்டாவுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் றோமா தோல்வியடைந்தது. அத்லாண்டா சார்பாக, டுவான் ஸபட்டா, மார்டின் டி றூன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

குறித்த போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டிலிருந்து கடனடிப்படையில் றோமாவால் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்களவீரர் கிறிஸ் ஸ்மோலிங், றோமாவுக்கான தனது அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற லேஸியோவுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றிருந்தது. இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டேனியல் டி அம்பிறிஸோ பெற்றிருந்தார்.

இப்போட்டிகளின் முடிவில் சீரி ஏ புள்ளிகள் பட்டியல் பின்வருமாறு,

  1. இன்டர் மிலன் 15 புள்ளிகள்
  2. ஜுவென்டஸ் 13 புள்ளிகள்
  3. அத்லாண்டா 10 புள்ளிகள்
  4. நாப்போலி 9 புள்ளிகள்
  5. கல்லேகிரி 9 புள்ளிகள்
  6. றோமா 8 புள்ளிகள்
  7. பொலொக்னா 8 புள்ளிகள்
  8. லேஸியோ 7 புள்ளிகள்
  9. டொரினோ 6 புள்ளிகள்
  10. ஏ.சி மிலன் 6 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .