Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் இரண்டில், இம்மாத இறுதியில், அமெரிக்காவின் புளோரிடாவில் விளையாடவுள்ளன என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகளை அமெரிக்காவில் நடத்துவது குறித்து, இருநாட்டுக் கிரிக்கெட் சபைகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த நிலையிலேயே, தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இடம்பெற்றுவரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவிலேயே இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதன்படி, ஓகஸ்ட் 27ஆம் திகதியும் 28ஆம் திகதியும், புளோரிடாவின் லோடெர்ஹில்லில் உள்ள மத்திய புரோவார்ட் பிராந்தியப் பூங்கா விளையாட்டரங்கில் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இரு நாட்டு வீரர்களுக்குமான அமெரிக்க விசாவைப் பெறுவதே, அமெரிக்காவில் இப்போட்டிகளை நடத்துவதற்கான பிரதான தடையாகக் கருதப்பட்டது. ஆனால், விசாவுக்குத் தேவையான ஆவணங்களை, இந்திய கிரிக்கெட் சபை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, அந்தத் தடங்கல் இல்லாது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் அநுரக் தாக்கூர், இந்தத் தொடரானது, வருடாந்தம் இடம்பெறும் தொடராக உருவாக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago