2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கெதிராக உறுதியான நிலையில் நியூஸிலாந்து

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கான்பூரில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்ட வேளை, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நியூஸிலாந்து அணி, ஒரு விக்கெட்டினை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் உள்ளது.

இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையுடன் பெய்த மழையினால், இரண்டாவது நாள் முடிவுக்கு வருவதாக மாலை 3.50 மணிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது களத்தில், அணித்தலைவர் 65, டொம் லதாம் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டினை உமேஷ் யாதவ் கைப்பற்றியிருந்தார்.

முன்னதாக, தமது முதலாவது இனிங்ஸில், இந்திய அணி 318 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, முரளி விஜய் 65, செட்டேஸ்வர் புஜாரா 62, இரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 42, இரவிச்சந்திரன் அஷ்வின் 40 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், நியூஸிலாந்து அணி சார்பாக, மிற்செல் சந்தர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் நீல் வக்னர் இரண்டு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .