Shanmugan Murugavel / 2016 ஜூன் 26 , மு.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுநராக, சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்றுநராக, அவ்வணியின் முன்னாள் தலைவரான அணில் கும்ளே, கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவரின் கருத்துகளை உள்வாங்கி, இந்தத் தொடருக்காக சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தவிர, அண்மையில் இடம்பெற்ற சிம்பாப்வே தொடரில், களத்தடுப்புப் பயிற்றுநராகப் பதவி வகித்த அபே ஷர்மா, இத்தொடருக்காகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் அணிப் பணிப்பாளராக ரவி ஷாஸ்திரி, ஓகஸ்ட் 2014இலிருந்து பதவி வகித்த காலத்தில், துடுப்பாட்டப் பயிற்றுநராகச் செயற்பட்ட பங்கர், அண்மைய சிம்பாப்வே தொடரில் தலைமைப் பயிற்றுநராகச் செயற்பட்டிருந்தார்.
இதேவேளை, இந்திய அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த ரவி ஷாஸ்திரி, தனக்கு அந்தப் பதவி வழங்கப்படாமை குறித்து, கடுமையாக ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தன்னுடைய காலத்தில், இளைய அணியொன்றைப் பலம்வாய்ந்த அணியாக மாற்றி, தரவரிசையில் மாபெரும் முன்னேற்றங்களைக் கண்டிருந்த நிலையில், தன்னை நியமிக்காமை ஏமாற்றம் தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
17 minute ago
22 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
2 hours ago
5 hours ago