2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

இந்தியாவை வென்றது அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 12 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்குக்குமிடையிலான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரின் இன்று பேர்த்தில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.  

இதில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 309 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 7, ஆறு ஓட்டங்கள், 13, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 171 ஓட்டங்களைக் குவித்து, அவுஸ்திரேலியாவில் வைத்து அவுஸ்திரேலியாவுக்கெதிராக, ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை ஏற்படுத்தினார். இதேவேளை, இவர் தவிர, விராத் கோலியும் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, ஜேம்ஸ் போக்னர் இரண்டு விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹேசில்வூட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, ஐந்து விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 149 ஓட்டங்களையும் ஜோர்ஜ் பெய்லி 112 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக அறிமுக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பிரயந்தர் சிறான் 3 விக்கெட்டுகளையும் இரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக ஸ்டீவன் ஸ்மித் தெரிவானார்.

இப்போட்டியில், அவுஸ்திரேலிய அணி சார்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோயல் பரிஸ், ஸ்கொட் போலண்ட் ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டிருந்த நிலையில், இந்தியா அணி சார்பாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பிரயண்டர் சிறான் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .