2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

இந்தியக் குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 01 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமானது 15 பேர் கொண்ட குழாமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள மேற்படிக் குழாமில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரர் விராத் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதுடன் அவருக்குப் பதிலாக, அவுஸ்திரேலியாவுக்கெதிரான இந்தியாவின் இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சதமடித்து, இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற மனீஷ் பாண்டே குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய, இடதுகை சுழற்பந்துவீச்சாளரும் பின்வரிசையில் அதிரடியாக ஆடக்கூடியவருமான பவான் நீகியும் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்,

தவிர, காயத்திலிருந்து குணமடைந்த வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் குழாமில் இடம்பெற்றுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் இருந்த வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.

இத்தொடரின் முதலாவது போட்டி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெறவுள்ளது.

குழாம்-மகேந்திர சிங் டோணி (தலைவர்), ரோஹித் ஷர்மா, ஷீகர் தவான், அஜிங்கியா ரகானே, மனீஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்டிக் பாண்ட்யா, இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரீட் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், புவனேஸ்வர் குமார், பவான் நீகி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .