Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக , இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இரண்டு, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிக்கான குழாமிலிருந்து யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹார்டிக் பாண்டியா, பவான் நீகி, ஹர்பஜன் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, மனிஷ் பாண்டே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் குழாமுக்கு மேலதிகமாக, இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் அணித்தலைவரான மகேந்திர சிங் டோணி, வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிறிட் பும்ரா, சகலதுறை வீரர் ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரே மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முரளி விஜய், செட்டேஸ்வர் புஜாரா, ஷர்டுல் தாக்கர், இஷாந் ஷர்மா, ரித்திமான் சகா ஆகியோர் டெஸ்ட் போட்டியின் முடிவில் திரும்பவுள்ளனர்.
குழாம்: மகேந்திர சிங் டோனி, ரோஹித் ஷர்மா, ஷீகர் தவான், விராத் கோலி, அஜின்கியா ரஹானே, லோகேஷ் ராகுல், இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிறிட் பும்ரா, மொஹமகட் ஷமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், அமித் மிஷ்ரா, ஸ்டூவர்ட் பின்னி
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago