2025 ஜூலை 16, புதன்கிழமை

இந்தியாவை வென்ற இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 15 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டை இங்கிலாந்து வென்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியை இந்தியாவும் வென்ற நிலையில் லோர்ட்ஸில் வியாழக்கிழமை (10)  ஆரம்பித்த இப்போட்டியின் ஐந்தாம் நாளை 4 விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இந்தியா, இரவீந்திர ஜடேஜாவின் ஆட்டமிழக்காத 61 ஓட்டங்களுடன் ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ் போராடியபோதும் ஜொஃப்ரா ஆர்ச்சர் (2), அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (2), கிறிஸ் வோக்ஸ், ஷொய்ப் பஷிரிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 170 ஓட்டங்களையே பெற்று 22 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. லோகேஷ் ராகுல் 39 ஓட்டங்களைப் பெற்றார்.

இப்போட்டியின் நாயகனாக ஸ்டோக்ஸ் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .