2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

இந்திய ஏ அணியின் தலைவராக ஷ்ரேயாஸ்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் லக்னோவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய ஏ அணியுடனான முதற்தரப் போட்டிகளுக்கான இந்திய ஏ குழாமுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை தாங்கவுள்ளார்.

அண்மைய இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தின்போது முழங்கால் காயத்துக்குள்ளான நிதிஷ் குமார் ரெட்டியும் இக்குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் மொஹமட் சிராஜ், லோகேஷ் ராகுல் ஆகியோர் இத்தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளனர்.

இதேவேளை குழாமில் பிரசீத் கிருஷ்ணா, சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், துருவ் ஜுரேல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

கலீல் அஹ்மட், யஷ் தாக்கூர் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும், மனவ் சுதர், ஹர்ஷ் டுபே, தனுஷ் கொட்டியன் ஆகியோரும் குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

குழாமில் கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், சஃப்ராஸ் கான் ஆகியோர் இடம்பெறவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X