Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று போட்டிகள் கொண்ட தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான குழாமில் பும்ரா இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.
பும்ரா தவிர, இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரில் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைப்பதற்காக ஓய்வளிக்கப்பட்ட சகலதுறை வீரர் ஹர்டிக் பாண்டியா குழாமுக்குத் திரும்பியுள்ளார்.
இதேவேளை, மேலதிக விக்கெட் காப்பாளராக பார்த்திவ் பட்டேல் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
குழாம்: முரளி விஜய், ஷீகர் தவான், செட்டேஸ்வர் புஜாரா, விராத் கோலி (அணித்தலைவர்), அஜின்கியா ரஹானே (உப அணித்தலைவர்), இரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்டிக் பாண்டியா, ரித்திமான் சஹா (விக்கெட் காப்பாளர்), இரவீந்திர ஜடேஜா, புவ்னேஷ்வர் குமார், மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல், பார்த்திவ் பட்டேல் (விக்கெட் காப்பாளர்).
இதேவேளை, இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரிலும் விராத் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இக்குழாமிலும் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இக்குழாமுக்கும் ரோஹித் ஷர்மா தலைமை தாங்குகிறார்.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், சகலதுறை வீரர் வொஷிங்டன் சுந்தர், துடுப்பாட்ட வீரர் டீபக் ஹூடா, வேகப்பந்துவீச்சாளர் பஸில் தம்பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்தியக் குழாமில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும். இவர்கள் தவிர, வேகப்பந்துவீச்சாளர் ஜெய்டேவ் உன்டகட்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
விராத் கோலி தவிர, புவ்னேஷ்வர் குமார், ஷீகர் தவான் ஆகியோருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
குழாம்: ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ஷேராயாஸ் ஐயர், மனீஷ் பாண்டி, தினேஷ் கார்த்திக், மகேந்திரன் சிங் டோணி (விக்கெட் காப்பாளர்), ஹர்டிக் பாண்டியா, வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், டீபக் ஹூடா, ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், பஸில் தம்பி, ஜெய்டேவ் உன்டகட்.
2 hours ago
3 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
19 Jul 2025