2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இந்தியக் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்ட பும்ரா

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 05 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியாவின் ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடருக்கான குழாமில் ஜஸ்பிரிட் பும்ரா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

முதுகுப் பகுதி உபாதை காரணமாக கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து போட்டிகளில் பங்கேற்றிருக்காத பும்ரா, அதிலிருந்து பெங்களூருவிலிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தேசிய கிரிக்கெட் அகடமியில் தேறி வந்திருந்தார்.

இந்நிலையில், உடற்றகுதியுடையவர் என அகடமியால் பும்ரா பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .