2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

இந்தியக் குழாமில் பண்டைப் பிரதியிட்ட ஜகதீசன்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 28 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியக் குழாமுக்கு முதற்தடவையாக விக்கெட் காப்பாளர் நாரயண் ஜகதீசன், இங்கிலாந்துக்கெதிரான ஐந்தாவது டெஸ்டுக்கு முன்பதாக அழைக்கப்பட்டுள்ளார்.

வலது பாதத்தை முறித்துக் கொண்ட றிஷப் பண்டை 29 வயதான ஜகதீசன் பிரதியிட்டுள்ளார்.

இதேவேளை நான்காவது டெஸ்டில் உபாதை, காயம் காரணமாக தெரிவுக்குத் தயாரில்லாமலிருந்த வேகப்பந்துவீச்சாளர்களான ஆகாஷ் டீப், அர்ஷ்டீப் சிங் ஆகியோர் முழுமையாகக் குணமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .