Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 23 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியானது அஹம நாளை பிற்பகல் 2.30 மணிக்கு பகலிரவுப் போட்டியாக ஆரம்பிக்கவுள்ளது.
முதலாவது போட்டியை இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியை இந்தியாவும் வென்று தொடர் சமநிலையில் காணப்படுகின்ற நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கான களத்தில் இரண்டு அணிகளும் இருக்கின்ற நிலையில் இப்போட்டி முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
வழமையாக பகலிரவுப் போட்டிகள் பெரும்பாலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாகக் காணப்படுகின்றபோதும், இவ்வாடுகளமானது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில், கடந்த போட்டியில் விளையாடிய மொஹமட் சிராஜ்ஜை ஜஸ்பிரிட் பும்ரா பிரதியிடுவதோடு, குல்தீப் யாதவுக்காக ஹர்திக் பாண்டியா அல்லது உமேஷ் யாதவ் விளையாடக்கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றது.
மறுப்பக்கமாக இங்கிலாந்தில், ஸ்டூவர்ட் ப்ரோட், மொயின் அலி, டான் லோரன்ஸை ஜேம்ஸ் அன்டர்சன், டொம் பெஸ், ஜொனி பெயார்ஸ்டோ பிரதியிடக்கூடியதுடன், ஒலி ஸ்டோனுக்காக ஜொஃப்ரா ஆர்ச்சர் விளையாடக்கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026