Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 06 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்தை, தொடரை நடாத்தும் நாடான இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்தை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா விளையாடிய எட்டுப் போட்டிகளிலும் வென்று 16 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், மற்றைய அணிகள் எஞ்சியுள்ள தங்களது அனைத்துப் போட்டிகளில் வென்றாலும் அதிகபட்சமாக தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியன 14 புள்ளிகளை மாத்திரமே பெற முடியும்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 326/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி ஆ.இ 101 (121), ஷ்ரேயாஸ் ஐயர் 77 (87), றோஹித் ஷர்மா 40 (24), இரவீந்திர ஜடேஜா ஆ.இ 29 (15), ஷுப்மன் கில் 23 (24), சூரியகுமார் யாதவ் 22 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 1/30, ககிஸோ றபாடா 1/48)
தென்னாபிரிக்கா: 83/10 (27.1 ஓவ. ) (பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 5/33, குல்தீப் யாதவ் 2/7, மொஹமட் ஷமி 2/18, மொஹமட் சிராஜ் 1/11)
போட்டியின் நாயகன்: விராட் கோலி
இந்நிலையில் மும்பையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தானை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago