Shanmugan Murugavel / 2021 ஜூன் 17 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது, செளதாம்டனில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஜஸ்பிரிட் பும்ரா, இஷாந்த் ஷர்மா, மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ் என இந்தியாப் பக்கமும், டிம் செளதி, ட்ரெண்ட் போல்ட், நீல் வக்னர், கைல் ஜேமிஸன் என நியூசிலாந்துப் பக்கமும் வேகப்பந்துவீச்சு வரிசையானது ஏறத்தாழ சமபலமாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில், சுழற்பந்துவீச்சைப் பொறுத்த வரையில் அஜாஸ் பட்டேலை விட மலையளவு முன்னிலையில் இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா ஆகியோர் காணப்படுகின்றனர்.
அந்தவகையில், விராட் கோலி தலைமையிலான செட்டேஸ்வர் புஜாரா, அஜின்கியா ரஹானே, ரோஹித் ஷர்மா, றிஷப் பண்டை உள்ளடக்கிய இந்தியத் துடுப்பாட்டப் படைக்கும், கேன் வில்லியம்ஸன் தலைமையிலான றொஸ் டெய்லர், ஹென்றி நிக்கொல்ஸ், டொம் லேதமை உள்ளடக்கிய நியூசிலாந்து துடுப்பாட்டப் படைக்குமிடையிலான மோதலே இப்போட்டியின் முடிவை தீர்மானிக்கப் போகின்றது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago