Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில், ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற இந்தியாவுடனான குழு 2 சுப்பர் 6 சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றது. வேதந் ட்ரிவேடி 68 (98), கனிஷ்க் சோகன் 35 (29), வைபவ் சூரியவன்ஷி 30 (22), ஆர்.எஸ். அம்பிறிஷ் 29 (38), கிலான் பட்டேல் 21 (15) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அப்துல் ஷுபன் 3, மொஹமட் சயாம் 2, அலி ராசா, அஹ்மட் ஹுஸைன், மொமின் குவாமர், அலி ஹஸன் பலூச் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 253 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 46.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களையே பெற்று 58 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. உஸ்மான் கான் 66 (92), ஹம்ஸா ஸஹூர் 42 (49), அணித்தலைவர் பர்ஹான் யூசுஃப் 38 (39) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அணித்தலைவர் ஆயுஷ் மாத்ரே 3, கிலான் பட்டேல் 3, விஹான் மல்ஹோத்ரா, ஆர்.எஸ். அம்பிறிஷ், கனிஷ் சோஹான், ஹெனில் பட்டேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக கனிஷ் சோஹான் தெரிவானார்.
8 minute ago
24 minute ago
32 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
32 minute ago
55 minute ago