Editorial / 2017 நவம்பர் 16 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கொல்கத்தாவில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய முதலாவது நாள் முடிவில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
போதிய வெளிச்சமின்மையால், இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோது, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தற்போது களத்தில், செட்டேஸ்வர் புஜாரா எட்டு ஓட்டங்களுடனும் அஜின்கியா ரஹானே ஓட்டமெதனையும் பெறாமலும் உள்ளனர். வீழ்த்தப்பட்ட மூன்று விக்கெட்டுகளையும் சுரங்க லக்மாலே வீழ்த்தினார். இதுதவிர, தான் இதுவரை வீசிய ஆறு ஓவர்களிலும் ஓட்டமெதனையும் சுரங்க லக்மால் விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மழையாலும் மைதானம் ஈரமாகப் காணப்பட்டதாலும் போதிய வெளிச்சமின்மை காரணமாகவும் மொத்தமாக 11.5 ஓவர்களே இன்றைய முதல் நாளின் போது வீசப்பட்டிருந்தன.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தினேஷ் சந்திமாலே, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
26 minute ago
35 minute ago
41 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
41 minute ago
52 minute ago