2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவுக்கெதிரான தொடரை இழந்தது இலங்கை

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை இழந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலாவது போட்டியில் ஏற்கெனவே தோற்றிருந்த இலங்கை, தரம்சாலாவில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் தோற்றதைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரை இழந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, தனுஷ்க குணதிலகவின் 38 (29), பதும் நிஸங்கவின் 75 (53) ஓட்டங்களோடு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றதுடன், அணித்தலைவர் தசுன் ஷானகவின் ஆட்டமிழக்காத 47 (19) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஜஸ்பிரிட் பும்ரா 4-0-24-1, யுஸ்வேந்திர சஹால் 4-0-27-1, புவ்னேஷ்வர் குமார் 4-0-36-1, இரவீந்திர ஜடேஜா 4-0-37-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு, 184 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஷர்மா, இஷன் கிஷனை துஷ்மந்த சமீர, லஹிரு குமாரவிடம் இழந்தபோதும், ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டமிழக்காத 74 (44), சஞ்சு சாம்ஸனின் 39 (25), இரவீந்திர ஜடேஜாவின் ஆட்டமிழக்காத 45 (18) ஓட்டங்களோடு 17.1 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X