Shanmugan Murugavel / 2022 மார்ச் 06 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இனிங்ஸால் இலங்கை தோற்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் மொஹாலியில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, தமது முதலாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 574 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், இரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175, றிஷப் பண்ட் 96, இரவிச்சந்திரன் அஷ்வின் 61, ஹனும விஹாரி 58, விராட் கோலி 45, மாயங்க் அகர்வால் 33, அணித்தலைவர் றோஹித் ஷர்மா 29, ஷ்ரேயாஸ் ஐயர் 27, மொஹமட் ஷமி ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, விஷ்வ பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லஹிரு குமார மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, சகல விக்கெட்டுகளையும் இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பதும் நிஸங்க ஆட்டமிழக்காமல் 61, சரித் அஸலங்க 29, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 28, அஞ்சலோ மத்தியூஸ் 22, லஹிரு திரிமான்ன 17 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவீந்திர ஜடேஜா 5, இரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 2, மொஹமட் ஷமி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், பொலோ ஒன் முறையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களையே பெற்று இனிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 51, தனஞ்சய டி சில்வா 30, அஞ்சலோ மத்தியூஸ் 28, திமுத் கருணாரத்ன 27, சரித் அஸலங்க 20 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 4, மொஹமட் ஷமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக இரவீந்திர ஜடேஜா தெரிவானார்.
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago