2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இந்தியாவை எதிர்கொள்ளுமா மேற்கிந்தியத் தீவுகள்?

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது, அஹமதாபாத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இந்தியா வென்ற நிலையில், தொடரைத் தக்க வைப்பதற்கு இப்போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது.

முக்கியமாக இனிங்ஸின் 50 ௐவர்களையும் மேற்கிந்தியத் தீவுகள் பயன்படுத்தி துடுப்பாட்ட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில், இந்தியக் குழாமுக்கு லோகேஷ் ராகுல் திரும்பிய நிலையில் அவர் இஷன் கிஷனை அணியில் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக அணித்தலைவர் கெரான் பொலார்ட், டரன் பிராவோ, நிக்கலஸ் பூரான், ஷே ஹோப் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் தொடர்ச்சியானதான பொறுப்பான பெறுபேறுகளை வெளிக்காட்ட வேண்டிய இக்கட்டான நிலை காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X