2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இந்தியாவை வீழ்த்தி சம்பியனான அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2023 ஜூன் 11 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா சம்பியனானது.

ஓவலில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இப்போட்டியில் இந்தியாவை 209 ஓட்டங்களால் வென்றே முதற் தடவையாக அவுஸ்திரேலியா சம்பியனானது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா, ட்ரெவிஸ் ஹெட்டின் 163, ஸ்டீவன் ஸ்மித்தின் 121, அலெக்ஸ் காரியின் 48, டேவிட் வோர்னரின் 43 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 469 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் 4, மொஹமட் ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2, இரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா சகல விக்கெட்டுகளையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அஜின்கியா ரஹானே 89, ஷர்துல் தாக்கூர் 51, இரவீந்திர ஜடேஜா 48 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அணித்தலைவர் பற் கமின்ஸ் 3, ஸ்கொட் போலண்ட், கமரொன் கிறீன், மிற்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2, நேதன் லையன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், அலெக்ஸ் காரி ஆட்டமிழக்காமல் 66, மர்னுஸ் லபுஷைன் 41, மிற்செல் ஸ்டார்க் 41, ஸ்டீவன் ஸ்மித் 34 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவீந்திர ஜடேஜா 3, உமேஷ் யாதவ், மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2, மொஹமட் சிராஜ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

அந்தவகையில் 444 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா சகல விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், விராட் கோலி 49, அஜின்கியா ரஹானே 46, அணித்தலைவர் றோஹித் ஷர்மா 43 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நேதன் லையன் 4, ஸ்கொட் போலண்ட் 3, மிற்செல் ஸ்டார்க் 2, பற் கமின்ஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ட்ரெவிஸ் ஹெட் தெரிவாகினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X