2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்தியாவை வீழ்த்தி சம்பியனான நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 24 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து சம்பியனானது.

செளதாம்டனில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த இந்தியாவுடனான அறிமுக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே நியூசிலாந்து சம்பியனாகியுள்ளது.

நேற்றைய ஆறாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களுடன் ஆரம்பித்த இந்தியா, ஆரம்பத்திலேயே அணித்தலைவர் விராட் கோலி, செட்டேஸ்வர் புஜாராவை கைல் ஜேமிஸனிடம் பறிகொடுத்தது.

பின்னர் தொடர்ந்து வந்த அஜின்கியா ரஹானே, இரவீந்திர ஜடேஜா ஆகியோர் ட்ரெண்ட் போல்ட், நீல் வக்னரிடம் வீழ்ந்ததுடன், குறிப்பிட்ட நேரம் நின்ற றிஷப் பண்டும் 41 ஓட்டங்களுடன் அடுத்து போல்டிடம் வீழ்ந்தார்.

இதையடுத்து, இரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் போல்ட், டிம் செளதியிடம் வீழ்ந்த நிலையில், சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது இரண்டாவது இனிங்ஸில் 170 ஓட்டங்களை இந்தியா பெற்றது.

அந்தவகையில், 139 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸை நிதானமாக ஆரம்பித்த நியூசிலாந்து, டொம் லேதம், டெவோன் கொன்வேயை குறிப்பிட்ட இடைவெளிகளில் இரவிச்சந்திரன் அஷ்வினிடம் பறிகொடுத்தது.

எவ்வாறெனினும், அடுத்து இணைந்த அணித்தலைவர் கேன் வில்லியம்ஸனின் ஆட்டமிழக்காத 52, றொஸ் டெய்லரின் ஆட்டமிழக்காத 47 ஓட்டங்களுடன் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நியூசிலாந்து வெற்றியிலக்கையடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக ஜேமிஸன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .