Shanmugan Murugavel / 2025 ஜனவரி 22 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, கொல்கத்தாவில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரானது கொல்கத்தா தவிர ராஜ்கோட், மும்பை உள்ளிட்ட சிறிய மைதானங்களில் நடைபெறுகின்ற நிலையில், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக ஆடுகளங்கள் அமையா விட்டால் ஓட்டக் குவிப்புகள் நிகழுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே இங்கிலாந்து அதிரடி காட்டுகின்ற நிலையில் தற்போது பிரெண்டன் மக்கலத்தின் பயிற்றுவிப்பின் கீழும் உள்ளதோடு, சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து இந்தியாவும் அதிரடியைக் காட்டுகின்றமே ஓட்டக் குவிப்புகளான சமிக்ஞைகளை வெளிப்படுத்தப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்த வரையில் மொஹமட் ஷமியின் மீள்வருகை எதிர்பார்க்கப்படுதோடு, ஹர்ஷித் ரானாவும் அவதானிக்கப்படலாம்.
இதேவேளை அண்மைய கால்ங்களில் ரிங்கு சிங்க் ஓட்டங்களைப் பெற்றிருக்காத நிலையில் அவரும் ஓட்டங்களைப் பெறுபது அவசியமாகிறது.
மறுபக்கமாக இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் அணித்தலைவர் ஜொஸ் பட்லர், மார்க் வூட், அடில் ரஷீட், ஜொஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
14 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
2 hours ago