Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 03 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜொஹன்னஸ்பேர்க்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் வென்றுள்ள இந்தியா தொடரைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்கு மிகவும் மேம்பட்ட பெறுபேறுகளை தென்னாபிரிக்கா வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
எனினும் தென்னாபிரிக்காவின் குயின்டன் டி கொக் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றமையானது அவ்வணிக்கும் மிகவும் பின்னடைவாகக் காணப்படுகின்றது. அணியில் அவரைக் கைல் வெரைன் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாற்றம் தவிர வியான் முல்டர் அல்லது மார்கோ ஜன்சனை டுவன்னே ஒலிவியர் தென்னாபிரிக்க அணியில் பிரதிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிவியரின் உள்ளடக்கமானது தென்னாபிரிக்காவுக்கு பலத்தை வழங்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியில் எதுவித மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago