Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
வெலிங்டனில் நேற்று (06) இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, முதல் 6 ஓவர்களில் விக்கெட் எதனையும் இழக்காமல் 66 ஓட்டங்களை, அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் குவிக்க, முதலாவது விக்கெட், 9ஆவது ஓவரிலேயே வீழ்த்தப்பட்டது.
ஆனால், அதன் பின்னரும், அதிரடியாக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டிம் செய்ஃபேர்ட், நியூசிலாந்துக்கு முக்கியமான முன்னிலையை வழங்கினார். இறுதியில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து, 219 ஓட்டங்களை அவ்வணி பெற்றது.
220 என்ற சவாலான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 5.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 51 ஓட்டங்களுடன் ஓரளவுக்குப் போராட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, 11 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களுடன் தடுமாறியது. இறுதியில், 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 80 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் டிம் சௌதி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, லொக்கி பேர்ஹுஸன், இஷ் சொதி, மிற்சல் சான்ட்னெர் மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஸ்கோர் விவரம்
நியூசிலாந்து: 219/6 (20 ஓவ.) (துடுப்பாட்டம்: டிம் செய்ஃபேர்ட் 84 (43), கொலின் முன்றோ 34 (20), கேன் வில்லியம்ஸன் 34 (22) ஓட்டங்கள்.)
இந்தியா: 139/10 (19.2 ஓவ.) (துடுப்பாட்டம்: மகேந்திரசிங் டோணி 39 (31) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் சௌதி - 4-0-17-3, லொக்கி பேர்ஹுஸன் 4-0-22-2, மிற்சல் சான்ட்னெர் 4-0-24-2, இஷ் சோதி 3-0-26-2)
போட்டியின் நாயகன்: டிம் செய்ஃபேர்ட்
8 hours ago
8 hours ago
03 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
03 Oct 2025