Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 நவம்பர் 01 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட்டானது மும்பையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்று தொடரை ஏற்கெனவே கைப்பற்றியுள்ள நியூசிலாந்து, 24 ஆண்டுகளில் முதற்தடவையாக இந்தியாவை சொந்த மண்ணில் வெள்ளையடிக்க எதிர்பார்த்துள்ளது.
நியூசிலாந்தைப் பொறுத்த வரையில் றஷின் றவீந்திர, டரைல் மிற்செல், டெவோன் கொன்வே, அணித்தலைவர் டொம் லேதம் போன்றோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர்.
இப்போட்டியில் டிம் செளதியை மற் ஹென்றி பிரதியிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
மும்பை ஆடுகளமும் சுழற்பந்துவீச்சுக்கே ஒத்துழைத்தாலும் நல்ல பவுண்ஸை வழங்குமென்ற நிலையில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடுவது இலகுவானதாகக் காணப்படும்.
இந்தியாவைப் பொறுத்த வரையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கு நான்கு போட்டிகளை வெல்லவேண்டியுள்ள நிலையில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன்பாக அணித்தலைவர் றோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியிடமிருந்து பெரிய இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அணியைப் பொறுத்த வரையில் கடந்த போட்டியில் விளையாடிய அணியே இப்போட்டியிலும் இந்தியா களமிறக்கும் எனத் தெரிகிறது.
3 minute ago
31 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
31 minute ago
52 minute ago