2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இன்டர் மிலனிலிருந்து வெளியேறும் டம்பிறைஸ்?

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 04 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மிலனின் வலது பின்களவீரரான டென்ஸில் டம்ஃபிறைஸைக் கைச்சாத்திட இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான செல்சி, மன்செஸ்டர் யுனைட்டெட், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியன எதிர்பார்த்துள்ளன.

26 வயதான டம்பிறைஸைக் கைச்சாத்திடுவதை கடந்த பருவகாலத்தில் மிலன் நிராகரித்திருந்த நிலையில், உலகக் கிண்ணத்தில் சிறப்பான செயற்பாடு காரணமாக மீண்டும் டம்பிறைஸைக் கைச்சாத்திடும் ஆர்வம் தோன்றியுள்ளது.

காயங்களால் அவதியுறும் றீஸ் ஜேம்ஸுக்கு மாற்றீடொன்றாக செல்சியும், டியகோ டலொட், ஆரோன் வான்-பிஸாகாவைத் தாண்டி வலது பின்களத்தில் தெரிவொன்றாக யுனைட்டெட்டும் நோக்குகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .