Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, மொஹாலியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள உலகக் கிண்ணத்துக்கு முன்பாக சிறந்த தயார்ப்படுத்தலாக இத்தொடர் காணப்படுகின்ற நிலையில், இரண்டு அணிகளும் தமது இறுதிப் 11 வீரர்களை அடையாளங்கண்டுகொள்ள உதவும் தொடராக இத்தொடர் நோக்கப்படுகிறது.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் லோகேஷ் ராகுலிடமிருந்து சிறப்பான பெறுபேறுகள் வர வேண்டிய அழுத்தம் காணப்படுகின்றது. தவிர, ஹர்டிக் பாண்டியாவும் பந்துவீச்சில் மிகவும் மேம்பட வேண்டியுள்ளதுடன், றிஷப் பண்டிடமிருந்தும் மிகவும் மேம்பட்ட பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கமாக அவுஸ்திரேலிய அணியில் தன்னை இடம்பெறச் செய்து கொள்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பாக டிம் டேவிட்டுக்கு இத்தொடர் காணப்படுகின்றது. தவிர, ஸ்டீவ் ஸ்மித்தும் தனதிடத்தை அணியில் நிரூப்பிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago