Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரானது டப்ளினில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் வழமையான அணித்தலைவர் ஹரி ப்றூக் மற்றும் ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜொஃப்ரா ஆர்ச்சர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் டொம் பன்டன், சனி பேக்கர், சாம் கர்ரன் உள்ளிட்டோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமிடத்து றெஹான் அஹ்மட், ஜோர்டான் கொக்ஸ் ஆகியோருக்கு தம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகக் காணப்படுகின்றது.
தவிர வரலாற்றில் இங்கிலாந்தின் இளம்தலைவராகவுள்ள ஜேக்கப் பெத்தெல்லுக்கும் தன்னை நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது.
மறுபக்கமாக அயர்லாந்தின் அணித்தலைவர் போல் ஸ்டேர்லிங் மற்றும் ஹரி டெக்டர், கரெத் டெலனி ஆகியோர் பிரகாசிக்கும் பட்சத்தில் இங்கிலாந்துக்கு சவாலையளிக்க முடியும்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025