2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இன்றைய போட்டியில் மோதும் இலங்கை, பங்களாதேஷ் அணிகள்

Freelancer   / 2023 நவம்பர் 06 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இன்று (06) இடம்பெறும் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் டெல்லியில் மோதவுள்ளன.

குறித்த போட்டி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டியில் மோதும் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டன.

இதன் முடிவு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிலையில் 2025 ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண போட்டிக்கு புள்ளி பட்டியலில் டொப்-8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X