Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஹரி ப்றூக் முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான் ஐந்தாவது டெஸ்டில் 164 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை இதே டெஸ்டில் 120 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் யஷஸ்வி ஜைஸ்வால், எட்டாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டில் 80 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டரைல் மிற்செல், 13ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை குறித்த சிம்பாப்க்கெதிரான போட்டியில் ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் மற் ஹென்றி, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
இதுதவிர இந்தியாவுக்கெதிரான குறித்த போட்டியில் எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் குஸ் அட்கின்ஸன், 12ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி பத்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் பாகிஸ்தானுக்கெதிரான மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மேற்கிந்தியத்தீவுகளின் அகீல் ஹொஸைன், பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
மேற்கூறப்பட்ட இருபதுக்கு - 20 போட்டிகளில் 36 ஓட்டங்களைப் பெற்றதுடன், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் றொஸ்டன் சேஸ், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஒன்பதாமிடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
39 minute ago
40 minute ago
49 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
40 minute ago
49 minute ago
57 minute ago