Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தடுமாறி வருகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், அடிலெய்ட்டில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, மர்னுஸ் லபுஷைனின் 103, டேவிட் வோணரின் 95, பதில் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தின் 93, அலெக்ஸ் காரியின் 51, மிற்செல் ஸ்டார்க்கின் ஆட்டமிழக்காத 39, மிஷெல் நேஸரின் 35 ஓட்டங்களோடு 9 விக்கெட்டுகளை இழந்து 473 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. பந்துவீச்சில், பென் ஸ்டோக்ஸ் 3, ஜேம்ஸ் அன்டர்சன் 2 மற்றும் ஸ்டூவர்ட் ப்ரோட், கிறிஸ் வோக்ஸ், ஒலி றொபின்ஸன், அணித்தலைவர் ஜோ றூட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் மலான் 80, றூட் 62, ஸ்டோக்ஸ் 34, வோக்ஸ் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஸ்டார்க் 4, நேதன் லையன் 3, கமரொன் கிறீன் 2, நேஸர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 9 விக்கெட்டுகளை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. லபுஷைன் 51, ட்ரெவிஸ் ஹெட் 51, கிறீன் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், றொபின்ஸன், றூட், மலான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அன்டர்சன், ப்ரோட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அந்தவகையில், 468 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து, நேற்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 82 ஓட்டங்களைப் பெற்றது. றிச்சர்ட்ஸன் 2, ஸ்டார்க் மற்றும் நேஸர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர். பேர்ண்ஸ் 34 ஓட்டங்களைப் பெற்றார். களத்தில் ஸ்டோக்ஸ் மூன்று ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார்.
25 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
50 minute ago