2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

இரண்டாவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 09 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் இன்று ஆரம்பித்த இரண்டாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் மொமினுல் ஹக், நியூசிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து பதில் அணித்தலைவர் டொம் லேதம், வில் யங்கின் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது.

54 ஓட்டங்களுடன் ஷொரிஃபுல் இஸ்லாமிடம் யங்க் வீழ்ந்தபோதும் அடுத்து வந்த டெவோன் கொன்வேயின் இணைப்பில் லேதம் ஓட்டங்களைக் குவிக்க, நேற்றைய முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்களை நியூசிலாந்து பெற்றுள்ளது. களத்தில், லேதம் 186, கொன்வே 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .