2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இரண்டாவது டெஸ்டில் போராடும் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 06 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் போராடுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை தென்னாபிரிக்கா வென்ற நிலையில், கேப் டெளணில் வெள்ளிக்கிழமை (03) ஆரம்பித்த இப்போட்டியின் மூன்றாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பாகிஸ்தான் 58 ஓட்டங்களுடன் பாபர் அஸாமை கவெனா மபஹாவிடம் இழந்தது.

சிறிது நேரத்தில் வியான் முல்டரிடம் 46 ஓட்டங்களுடன் மொஹமட் றிஸ்வான் வீழ்ந்ததோடு, சம்லான் அக்ஹா, ஆமிர் ஜமால், மிர் ஹம்ஸா, குரான் ஷஷாட் ஆகியோர் கேஷவ் மஹராஜ் (2), ககிஸோ றபாடா, மபஹாவிடம் விழ சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 194 ஓட்டங்களையே பாகிஸ்தான் பெற்றது.

இந்நிலையில் பொலோ ஒன் முறையில் இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான், அணித்தலைவர் ஷண் மசூட், பாபரின் இணைப்பில் போராட்டத்தை வெளிப்படுத்தியது.

மார்கோ ஜன்சனிடம் 81 ஓட்டங்களுடன் பாபர் வீழ்ந்த நிலையில் மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்களைப் பெற்றுள்ள பாகிஸ்தான், தென்னாபிரிக்காவின் முதலாவது இனிங்ஸை விட 208 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. களத்தில் மசூட் 102 ஓட்டங்களுடனும், குராம் ஷஷாட் எட்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X