Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென்னாபிரிக்கா முன்னிலையில் காணப்படுகின்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, சரெல் எர்வீயின் 108, ஏய்டன் மார்க்ரமின் 42, அணித்தலைவர் டீன் எல்கரின் 41, மார்கோ ஜன்சனின் ஆட்டமிழக்காத 37, கேஷவ் மஹராஜ்ஜின் 36, றஸி வான் டர் டுஸனின் 35, தெம்பா பவுமாவும் 29 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 364 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், நீல் வக்னர் 4, மற் ஹென்றி 3, கைல் ஜேமிஸன் 2, டிம் செளதி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கொலின் டி கிரான்ட்ஹொம் ஆட்டமிழக்காமல் 120, டரைல் மிற்செல் 60, ஹென்றி நிக்கொல்ஸ் 39 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ககிஸோ றபாடா 5, மார்கோ ஜன்சன் 4, கேஷவ் மஹராஜ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், கைல் வெரைன் 22, வியான் முல்டர் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். முன்னதாக, 45 ஓட்டங்களுடன் றஸி வான் டர் டுஸன் ஆட்டமிழந்திருந்தார். பந்துவீச்சில், டிம் செளதி 2, நீல் வக்னர் 2, மற் ஹென்றி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .